செய்திகள்
ரியோ ஒலிம்பிக்: யோகேஷ்வர் தத் தோல்வி; இந்தியா தலா ஒரு வெள்ளி, வெண்கலத்துடன் திருப்தியடைந்துள்ளது
ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் 0-3 என மங்கோலிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ரியோ ஒலிம்பிக்கின் கடைசி நாளான இன்று ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவு ப்ரீஸ்டைல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதற்காக தகுதிச் சுற்றில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் மங்கோலிய வீரரான கான் ஜோரிக்கை எதிர்கொண்டார்.
இதில் 0-3 என யோகேஷ்வர் தத் தோல்வியடைந்து வெளியேறினார். இவரது தோல்வியால் மல்யுத்தத்தில் சாக்சி மாலிக் வெண்கலத்துடன் இந்தியா திருப்பதியடைந்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. கடைசி நாளில் யோகேஷ்வர் தத்ததும் ஏமாற்றியதால் இந்தியா தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்துடன் திருப்பதியடைய வேண்டியதாயிற்று.