செய்திகள்
சிந்துவின் ரசிகர் என்று ரஜினிகாந்த் கூறியது நெகிழ வைத்துவிட்டது: சிந்துவின் தாயார் பெருமிதம்
நான் சிந்துவின் ரசிகராக இப்போது மாறி விட்டேன் என்று ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது தனக்கு பெருமிதம் அளிப்பதாக சிந்துவின் தாயார் கூறியுள்ளார்
சென்னை:
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவின் தாயார் பி.விஜயா நேற்று ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இறுதிப்போட்டி முடிந்ததும் சிந்து என்னிடம் பேசினார். கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்தார். அவரிடம் ஆட்டத்தை பற்றி எதுவும் நான் பேசவில்லை. ‘கவலைப்படாதே சிந்து. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். இதுவே பெரிய விஷயம். நீ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி எங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்து விட்டாய்’ என்று கூறி தேற்றினேன். அதன் பிறகு அவர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
அவர் நாளை (திங்கட்கிழமை) தாயகம் திரும்புகிறார். மாநில அரசு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. அவர் வீட்டுக்கு வந்ததும் அவருக்கு பிடித்த மைசூர்பாகு, பிரியாணி உள்ளிட்டவை செய்து கொடுப்பேன்.
நான் சென்னையில் 18 ஆண்டுகள் இருந்துள்ளேன். எனக்கு நன்கு தமிழ் தெரியும். சிந்து சில வார்த்தைகள் தமிழில் பேசுவார். அதே சமயம் தமிழில் மற்றவர்கள் பேசினால், புரிந்து கொள்வார்.
நடிகர் ரஜினிகாந்த், சிந்துவை பாராட்டியதோடு ‘நான் சிந்துவின் ரசிகராக இப்போது மாறி விட்டேன்’ என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் எவ்வளவு பெரிய மனிதர். மிகப்பெரிய நடிகரான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் எனது மகளின் ரசிகர் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை படித்ததும் உண்மையிலேயே நெகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
இவ்வாறு பி.விஜயா கூறினார்.