செய்திகள்

பிரிட்டன் பெண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனை

Published On 2016-08-20 19:53 IST   |   Update On 2016-08-20 19:53:00 IST
ரியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது பிரிட்டன் பெண்கள் ஹாக்கி.
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை தங்கப் பதக்கம் வாங்கிய நடப்பு சாம்பியன் நெதர்லாந்து அணியுடன் பிரிட்டன் அணி மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் போட்டியின் நேரம் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 3-3 கோல்கள் அடித்து சமநிலைப் பெற்றிருந்தது.

இதனால் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரிட்டன் 2-0 என வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. ஹாட்ரிட் சாதனை படைக்க முடியாமல் நெதர்லாந்து ஏமாற்றம் அடைந்து வெள்ளிக் பதக்கத்தோடு திருப்தி அடைந்தது.

முன்னதாக, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணி, நியூசிலாந்தை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

Similar News