செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் ஹர்தீப் சிங் ஏமாற்றம் அளித்தார்

Published On 2016-08-16 20:26 IST   |   Update On 2016-08-16 20:27:00 IST
ரியோ ஒலிம்பிக்கில் இன்று கிரேக்கோ - ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்தீப் சிங் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. மல்யுத்தத்தின் கிரேக்கோ - ரோமன் பிரிவில் இந்தியாவின் ஹர்தீப் சிங் 93 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கியின் செங் இடம் வீரருடன் மோதினார்.

மூன்று சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு சுற்றிலும் துருக்கி வீரரின் கையே ஓங்கியிருந்தது. இதனால் முதல் இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றார். கடைசி சுற்று இந்திய வீரர் ஹர்தீப் சிங் கைப்பற்றினார். இதனால் 1-2 என ஹர்தீப் சிங் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

Similar News