செய்திகள்
தீபா கர்மாகர், லலிதா பாபர் ஆகியோரை அரசு கவுரவிக்க வேண்டும்: சேவாக் வலியுறுத்தல்
ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் மற்றும் தடகளத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பெருமை சேர்த்த தீபா கர்மாகர் மற்றும் லலிதா பாபருக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ‘வால்ட்’ பிரிவில் தகுதி சுற்றில் 8-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதுடன், புதிய வரலாறும் படைத்தார்.
தீபா கர்மாகர் பதக்கம் வெல்லாவிட்டாலும் உடல் திறமைக்கும், மன உறுதிக்கும் கடும் சோதனையாக விளங்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். தீபா கர்மாகர் வெளிநாடுகளில் பயிற்சி எதுவும் பெறாமலே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை மங்கையாக கருதப்படும் தீபா கர்மாகர் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டில் நடந்த உலக போட்டியில் 5-வது இடமும் பிடித்து இருந்தார்.
துரதிருஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-வது இடம்பெற்று நூலிழையளவில் பதக்க வாய்ப்பை இழந்தார். பதக்கத்தை இழந்தாலும் 120 கோடி இந்திய மக்களின் நன்மதிப்பை இழக்கவில்லை. தீபாவின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதுடன், தன்னம்பிக்கையும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திரர் சேவாக், இந்திய அரசு திபா கர்மாகருக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ஒலிம்பிக்கில் முத்திரை பதித்த தீபா கர்மாகர், லலிதா பாபர் ஆகியோரை கவுரவிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தடகளத்தில் 36 ஆண்டுக்களுக்குப் பிறகு பாபர் லலிதா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.