செய்திகள்

ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி

Published On 2016-08-08 10:54 IST   |   Update On 2016-08-08 10:54:00 IST
ஜிம்னாஸ்டிக் போட்டி வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

ரியோ டி ஜெனிரோ:

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, கோல்ப், ஜிம்னாஸ் டிக், ஜூடோ, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம், நீச்சல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்று 118 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்குக்கு சென்று உள்ளனர்.

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனையான தீபா கர்மகர் பங்கேற்றுள்ளனர். திரிபுராவை சேர்ந்த 22 வயதான அவர் ஆர்டிஸ்டிக் தனி நபர் ஆல்ரவுண்டர் பிரிவில் கலந்து கொண்டார்.

இதன் வால்ட் பிரிவில் தீபா கர்மகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று புதிய வரலாறு படைத்தார். அவர் தகுதி சுற்றில் 14.850 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் வால்ட் தனி நபர் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் மோதும் இறுதிப் போட்டி 14-ந்தேதி நடக்கிறது. ஒட்டு மொத்த பிரிவில் அவரால் இறுதி சுற்றுக்கு முன்னேற இயலவில்லை. அவர் 51.665 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தார்.

Similar News