செய்திகள்

ஒலிம்பிக் ஜோதியை கடைசியாக பெற்ற பிரேசில் பிளாஸ்டிக் சர்ஜரி மேதை மரணம்

Published On 2016-08-07 14:35 IST   |   Update On 2016-08-07 14:35:00 IST
பிரேசில் நாட்டின் பிளாஸ் டிக் சர்ஜரி மேதை இவோ பிதான்கய். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ரியோ டி ஜெனிரோ:

பிரேசில் நாட்டின் பிளாஸ் டிக் சர்ஜரி மேதை இவோ பிதான்கய். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 90. பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையில் பிரேசிலுக்கு பெருமை சேர்ந்தவர். தொடர் ஓட்டம் மூலம் கொண்டு வரப்பட்ட ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் ஜோதியின் இறுதி பயணம் கவீயா என்ற இடத்தில் முடிந்தது. நேற்று முன்தினம் அந்த ஜோதியை இவோ பிதான்கய் பெற்று முடித்து வைத்தார். அதை தொடர்ந்து பிரேசில் முன்னாள் மாரத்தான் வீரர் வான்டெர்லீ டி லிமா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

இவரது மறைவுக்கு பிரேசில் இடைக்கால அதிபர் மைக்கேல் டெமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நிடேரோயில் கடந்த 1961-ம் ஆண்டு சர்க்கஸ் கொட்டகையில் தீப்பிடித்து நூற்றுக்கணக்கானவர்கள் உடல் கருகி பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிதான்கய் சிகிச்சை அளித்து குணப்படுத்தினார். பாரீஸ் மற்றும் லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கு பயிற்சி பெற்ற அவர் பிரேசிலில் மேதை ஆக புகழப்பட்டார். வாரத்தில் ஒருநாள் இலவசமாக மருத்துவ சேவை செய்து வந்தார்.

Similar News