செய்திகள்

துடுப்பு படகு போட்டி: இந்திய வீரர் 3-வது இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி

Published On 2016-08-06 17:33 IST   |   Update On 2016-08-06 17:33:00 IST
துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் தத்து பவன் பொக்கேனல் தகுதிச் சுற்றில் 3-வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கியது. இன்று ஆண்களுக்கான துடுப்புப் படகு போட்டியின் தகுதிச் சுற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற 32 நாட்டு வீரர்கள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

இதில் இந்திய வீரர் தத்து பவன் பொக்கேனல் முதல் பிரிவில் இடம்பிடித்திருந்தார். இவருடன் 6 பேர் இந்த சுற்றில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சுற்றிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்த தகுதிச் சுற்றில் இந்திய வீரர் சிறப்பாக செயல்பட்டு 3-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறினார். அவர் 1500 மீ்ட்டர் தூரத்தை 7 நிமிடங்கள் 21:67 வினாடிகளில் கடந்தார்.

1500 மீட்டர் துடுப்பு படகு போட்டி இன்று முதல் 9-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஃபிசா ஆசியன் மற்றும் ஓசியானியா ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News