வில்வித்தை போட்டி: தீபிகா குமாரி, லட்சுமிராணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, லட்சுமி ராணி பங்கேற்கின்றனர்.
இதில் தீபிகாகுமாரி 640 புள்ளிகள் பெற்று 20-வது இடத்தை பிடித்தார். பம்பய்லாதேவி 24-வது இடத்தையும், லட்சுமிராணி 43-வது இடத்தையும் பிடித்தனர். 3 பேரும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) முன்னேறினர்.
இந்த சுற்றில் தீபிகாகுமாரி ஜார்ஜியா வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதுகிறார். லட்சுமிராணி சுலோ வாக்கியாவின் அலெக்சாண்டராவுடன் பலப் பரீட்சை நடத்துகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் ரேங்கிங் சுற்றில் 5-வது இடத்தை பிடித்தார். அவர் 683 புள்ளிகள் சேர்த்தார்.
இதில் தென்கொரிய வீரர் கிம்வூஜின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் 700 புள்ளிகள் குவித்தார். அடுத்த சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் நேபாள வீரர் ஜிட்பெகதூருடன் மோதுகிறார்.
பெண்கள் அணிகள் பிரிவில் தீபிகாகுமாரி, லட்சுமிராணி, பம்பய்லோ தேவி ஆகியோரை கொண்ட இந்திய அணி ரேங்கிங் சுற்றில் 7-வது இடத்தை பிடித்தது. இந்திய அணி 1892 புள்ளிகள் எடுத்தது.