சிறப்புக் கட்டுரைகள்
null

மருத்துவம் அறிவோம்- சக்தி கிடைக்க வழிகள்

Published On 2023-05-29 11:15 GMT   |   Update On 2023-05-29 11:15 GMT
  • ரோக்கியமான, சத்தான உணவு மிக அவசியம். தவறான உணவுகள் சக்தியினை இழக்கச் செய்யும்.
  • அன்றாடம் 20 நிமிடம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தியானம் செய்வது சக்தியினைக் கூட்டும்.

சக்தி: இது இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது. பிரபஞ்சமே ஸ்தம்பித்து விடும். காலையில் சக்தியோடு வேலைக்கு செல்லும் மனிதன் மாலையிலேயே சக்தி இல்லாமல் துவண்டு விடுகின்றான். ஆக மனிதனுக்கு தொடர்ந்து இயங்க தொடர் சக்தி பல வழிகளில் அவனுக்கு கிடைக்க வேண்டும்.

அப்படி மனிதனுக்கு சக்தி கொடுப்பவை எவை எவை என்று தெரியுமா?

சூரிய ஒளி- உடலில் சூரிய ஒளி பட வேண்டும். சுட்டெரிக்கும் வெயில் என்று பொருள் கொள்ளக் கூடாது. காலை, மாலை சூரிய ஒளியில் நடப்பதே நம் உடலுக்கு சக்தி கொடுக்கும்.

சுத்தமான காற்று- மாசு, தூசு படிந்த காற்றினை சுவாசிப்பது பல நோய்களை உருவாக்கி சக்தி இழக்கச் செய்யும். சுத்தமான காற்று மனிதனுக்கு மிக அவசியம். திறந்த வெளி, பூங்கா இங்கெல்லாம் சென்றாலே உடல் சக்தி பெறும்.

* ஆரோக்கியமான, சத்தான உணவு மிக அவசியம். தவறான உணவுகள் சக்தியினை இழக்கச் செய்யும்.

தேவையான அளவு நீர்- சுமார் 2 முதல் 2½ லிட்டர் நீர் மற்றும் மோர் போன்றவை குடிக்க உடலில் நச்சுகள் வெளியேறும். உடல் சக்தி பெறும்.

உடற் பயிற்சி- அன்றாடம் 20 நிமிடம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தியானம் செய்வது சக்தியினைக் கூட்டும்.

* அவ்வப்போது ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்வதும் உடலை சுத்தமாக்கி, ரத்த ஓட்டத்தினை சீராய் வைக்கும். ஆனால் ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யும்போது வயிறு காலியாய் இருப்பது நல்லது.

* சுய அக்கறை சுய கவனிப்பு அவசியம். பிறர் வந்து தன்னை கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.

* முறையான தூக்கம் 7 முதல் 8 மணி நேரம் அவசியம்.

* இனிமையான, மென்மையான இசை சிறிது நேரம் கேட்பது அவசியம். (இவை அனைத்தும் சக்தியினைக் கூட்டும்) நமது சக்தியினை குறைப்பவை எவை என்று தெரியுமா?

* அதிக நேரம் டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் இவற்றில் மூழ்கி இருப்பவர்கள் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள்.

* பயம், சந்தேகம், ஸ்ட்ரெஸ் இவை உடல் சக்தியினை வெகுவாய் இழக்க வைக்கும்.

* மிக அதிக சிந்தனையிலேயே இருப்பவர்கள் சக்தியே இல்லாது தொய்ந்து இருப்பர்.

* இருக்கும் இடம் சுத்தமற்று, முறையாய் இல்லாமல் இருந்தால் சக்தி குறையும்.

* தண்ணீர் குறைவாய் குடித்தால் சோர்ந்து இருப்பர்.

* தேவையான அளவு உணவு இல்லாவிடில் பலவீனமாய் இருப்பர்.

* மிக அதிகமாக வேலை செய்பவர்கள், ஓய்வின்றி உழைப்பவர்கள். இவர்கள் சோர்ந்து விழுந்து இருப்பார்கள்.

* தேவையான அளவு உடற்பயிற்சி இல்லாவிடில் சக்திேய இருக்காது.

* தவறான உணவுகள் சக்தியினை உடலில் இல்லாமல் செய்து விடும்.

* எப்போதும் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கி வருத்தத்திலேய இருப்பவர்கள் சக்தி இன்றியே இருப்பர்.


கமலி ஸ்ரீபால்

* பலர் காலை முதல் இரவு வரை உட்கார்ந்த இடத்திலேயே இருப்பார்கள். இவர்கள் வேளை தவறாது உணவு உட்கொண்டாலும் மிகவும் சோர்வாய் நடப்பதற்கு கூட பிறரின் சக்தி கொண்டு நடப்பார்கள்.

* கற்பனை உலகத்தில் வாழ்பவர்கள், சரியில்லாத குறிக்கோள்கள் உடையவர்கள், எந்த ஒரு முயற்சியும் செய்யாது இருப்பவர்கள் சக்தி இன்றியே இருப்பர்.

ஆக சக்தியின்மை இன்றி வாழ்வு இல்லை. அதனை நன்கு கூட்டிக் கொண்டு ஆரோக்கியமாக வாழும் வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் சில வழிமுறைகள் நம் உடல் சக்தி இழக்காமல் இருக்க அறிவோம்.

* மனிதனுக்கு கோபம் வருகிறது, அந்த கோபத்தில் வாய் கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய் விடுகின்றது. இந்த செயல் கோபம் அடைபவர். அவரால் பாதிக்கப்படும் எதிராளி இருவரையும் ஆழ் மனதில் புண்ணாய் பாதித்து விடுகின்றது. எவ்வளவு சக்தியினை உடல் இதனால் இழக்கின்றது. இதனை எப்படி தவிர்ப்பது?

* கோபம் பொங்கி எழுகின்றதா? வார்த்தைகளை கொட்டி விடுவோம் என்பது போல் இருக்கின்றதா? முதலில் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து விடுங்கள். தொலைபேசியில் பேச வேண்டி இருப்பின் போனை வைத்து விடுங்கள். அமைதியாய் பேசாமல் இருந்து விடுங்கள். இல்லையெனில் சற்று வேகமாய் நடைபயிற்சி செய்யுங்கள். வயதிற்கேற்ப ஸ்கிப்பிங், நீச்சல் செய்யலாம். வீட்டை சுத்தம் செய்யலாம். வாயை மட்டும் திறக்கக் கூடாது. இதில் நம் சக்தி கூடும். பிரச்சினைகள் பெரிதாகாது. உறவுகள் பலப்படும்.

சிறுநீரகம்- சிறுநீரக பாதிப்பு என்பது உலக அளவில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகின்றது. ஆனால் சில வாழ்க்கை முறை ஆரோக்கியமான மாறுதல்கள் சிறுநீரகத்தினை பாதுகாக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அவைகள் என்ன என்று பார்ப்போம். * சிகப்பு அசைவம் இரும்பு சத்து நிறைந்ததுதான். ஆனால் இதனை மிக அதிகமாக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகத்தினை பாதிக்கும் விஷம் ஆகின்றது. ஆக சிகப்பு அசைவத்தினை மிக அளவோடே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சோடா, காற்றுடைய பானங்கள் இவைகளை தாகம் எடுக்கும் நேரத்தில் அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர். சிலர் பழக்கத்தின் காரணமாக இவ்வாறு எடுத்துக் கொள்கின்றனர். சிறுநீரகத்தினை பாதுகாக்க பொதுவில் இவைகளை தவிர்த்து சுத்தமான நீர் எடுத்துக் கொள்ளலாம்.

* மிக அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதனை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

* அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை உபயோகிப்பதனை, டாக்டர் அறிவுரையின்றி தானே மாத்திரைகள் எடுத்துக் கொள்வதனை தவிர்க்க வேண்டும்.

* மது என்பது வேண்டவே வேண்டாம்.

* சீறுநீர் வெளிப் போக்கினை அடக்கி வைத்திருப்பது தவறு.

* அதிகமாக வெண்ணை உபயோகம் தவிர்க்க வேண்டும்.

* ஒரு கப் காபி போதும் என்று கூறுகின்றனர்.

* மூன்று, நான்கு கப் காபி உபயோகிப்பவர்கள் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

* செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்த்து விட வேண்டும்.

* 7 அல்லது 8 மணி நேர ஆழ் தூக்கம் அவசியம்.

* 2 முதல் 2½ லிட்டர் நீர் அவசியம்.

* புகை பிடிப்பது சிறு நீரகத்தினை வெகுவாய் பாதிக்கும்.

* உயர் ரத்த அழுத்தம் பற்றி கூடுதல் கவனம் அவசியம்.

* சத்து மாத்திரைகள், சத்து உணவு இவற்றினை மருத்துவர் அறிவுரைபடியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* கடும் உடற்பயிற்சிகள் வேண்டாமே.

* முறையாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

* ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ, பழக வேண்டும்.

* அதிக சர்க்கரை கூடாது.

* பழங்கள், காய்கறிகள் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* ஆலிவ் எண்ணை பயன்படுத்த வேண்டும்.

இதே போன்று நாம் பாதுகாப்பாய் இருக்க நமது நிணநீர் மண்டலத்திற்கும் கவனம் கொடுக்க வேண்டும். இதனை உடலின் கழிவு மண்டலம் எனலாம். நிண நீர் மண்டலம் மந்தமாக செயல்பட்டால் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படும். நிண நீர் மண்டலத்தினை நன்கு செயல்பட வைக்க.

* பழங்கள் உண்ண வேண்டும். காலை உணவிற்கு முன்போ அல்லது மாலையிலோ எடுத்துக் கொள்ளலாம்.

* நன்கு நீர் அதாவது தேவையான அளவு நீர் குடிப்பது நிணநீர் மண்டலத்தினை ஆரோக்கியமாய் செயல்பட வைக்கும்.

* வாரம் ஒருமுறை நன்கு எண்ணை தேய்த்து உடலினை மசாஜ் செய்து கொள்ளலாம்.

* முறையான உடற்பயிற்சி, இளம் வயதினர் ஓடும் பயிற்சி போன்றவை செய்வது நிணநீர் மண்டலத்தினை நன்கு இயங்கச் செய்யும்.

* கிரீன் டீ, மூலிகை டீ இவை நல்லது.

* வெது வெதுப்பான நீர், சாதா நீர் இதில் மாறி மாறி ஷவர் குளியல் எடுத்துக் கொள்ளலாம்.

* கொட்டை, விதைகள் இவற்றினை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* உலர்ந்த சருமத்தில் உலர்ந்த துண்டு கொண்டு வட்ட முகமாக மென்மையாக தேய்த்து விடலாம்.

* மூச்சுப் பயிற்சி நன்மை பயக்கும். உடலில் கழிவு தேங்காது இருப்பதே மிகப்பெரிய ஆரோக்கியம். இதனை கருத்தில் கொண்டு சிறிது கவனம். அன்றாடம் நம் உடலுக்கு கொடுத்தாலே போதும். நோயின்றி இருக்கலாம். மேலும் கூடுதலாக ஆரோக்கியத்திற்காக கீழ்க்கண்ட முறைகளையும் பயிற்சி செய்யலாம்.

* மனம் பல விஷயங்களை அதிகமாக சிந்தித்துக் கொண்டே இருக்கின்றதா? எண்ணங்களை எழுதி விடுங்கள். மனம் அமைதிப்படும்.

* மனம் சதா கவலைப் படுகின்றதா? கண்டிப்பாய் தியானம் பழகுங்கள்.

* ரொம்ப சோம்பலாகவே இருக்கின்றீர்களா? அதிகம் டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதனைக் குறைத்து விடுங்கள்.

* சோகம் மனதினை கவ்வுகின்றதா? ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* கோபம் வருகின்றதா? நல்ல இசை கேட்கலாம்.

* மன உளைச்சல் மனதினை சங்கடம் செய்கின்றதா? வீட்டினுள் இருந்தால் கூட 15 நிமிடம் நடந்து பாருங்களேன்.

அதிசயம்- இன்று நாம் காணும் அசாத்திய செயல்களை அசாத்திய இயற்கையினை, அசாத்திய மருத்துவ முன்னேற்றத்தினை அதிசயம் என்கின்றோம். கடும் நோயில் ஒருவர் பிழைக்கும் பொழுதும் அதிசயம் என்கின்றோம். மிக ஆரோக்கியமாகக் கருதப்பட்ட நபர் திடீரென மறையும் பொழுதும் அதிசயம் தான் என்கின்றோம். ஆனால் வாழ்வே அதிசயம்தான். ஒவ்வொரு பிறப்பும் ஒரு அதிசயம்தான். ஆக நாமும் நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொன்றும், சூரிய உதயம் முதல் இரவு வரை கூட அன்றாட அதிசயம்தான். நம் மனதில் ஒன்றை உருவாக்கி அதனை சதா நினைத்து அந்த ஒன்று உயிர் பெற்று நிகழ்வதும் அதிசயம்தான். எனவே ஒவ்வொரு நொடியும் நான் நலமாக வாழ்கிறேன் என்று நினைக்கலாமே.

Tags:    

Similar News