சிறப்புக் கட்டுரைகள்

புற்று நோயை தடுக்கும் வழிமுறைகள்- கமலி ஸ்ரீபால்

Published On 2023-03-13 17:45 IST   |   Update On 2023-03-13 17:46:00 IST
  • ஆரம்ப கால அறிகுறிகளுக்கு கவனம் கொடுக்கும் போது அதிக நன்மைகளைப் பெற முடியும்.
  • உணவில் நார் சத்து குறைவாக இருந்தாலும் அடிக்கடி பசி ஏற்படும்.

இன்றைய கால கட்டத்தில் புற்று நோய் பாதிப்பு என்பது சற்று கூடுதலாகவும், சற்று பரவலாக பல இடங்களிலும் காணப்படுகின்றது. பெண்கள் இதன் அறிகுறிகளில் கவனம் செலுத்தாமல் சற்று கவனக்குறைவாக இருந்து விடுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரம்ப கால அறிகுறிகளுக்கு கவனம் கொடுக்கும் போது அதிக நன்மைகளைப் பெற முடியும். புற்று நோய் தவிர்ப்பு முறையாக மருத்துவர் சில பரிசோதனைகளைக் கூறினால் அதனை செய்ய வேண்டும். புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், பரம்பரையில் பாதிப்பு உள்ளவர்கள், அதிகமான கடும் வெயிலில் இருப்பவர்கள் கூடுதல் கவனம் பெற வேண்டியவர்கள் ஆகின்றனர். உடலில் ஏதேனும் மாறுதல் தெரிந்தால் உடனடியாக அதற்கு மருத்துவ கவனம் அளிக்க வேண்டும்.

* மூச்சு வாங்குதல், மூச்சு இழுப்பு இருப்பது.

* தொடர்ந்து இருமல் மற்றும் எச்சிலில் ரத்தம் கலந்து இருப்பது. * மார்பகத்தில் கட்டி மற்றும் கசிவு * அடிக்கடி சிறுநீர் செல்லுதல், சிறிதளவே செல்லுதல், வேகமின்றி மிக மெதுவாய் செல்லுதல்.

* கழுத்து, அக்குள், தொடை மடிப்பில் நெறி கட்டி இருத்தல்.

* அடிக்கடி அடிபட்டு அதிக ரத்தப் போக்கு ஏற்படுதல்.

* வயிறு உப்பிசம், வயிற்று பகுதியில் எடை கூடுதல்

* பெண் உறுப்பில் மாத விலக்கிற்கு நடுவே ரத்த கசிவு ஏற்படுதல்.

* ஆசன வாயில், பெண் உறுப்பில் தொடர் அரிப்பு. * முதுகு வலி, இடுப்பு வலி

* அடிக்கடி அஜீரணம், விழுங்குவதில் சிரமம்.

* மலத்துடன் ரத்தம். * வயிற்று வலி, வயிற்று பிரட்டல் * வாயில் புண், வலி * அடிக்கடி ஜுரம், கிருமி பாதிப்பு

* விடாத தொடர் தலைவலி * காரணமே இல்லாது எடை குறைதல்

* நகத்தின் நிறங்கள் மாறுதல் * அதிக சோர்வு

இவற்றினை உனடியாக கவனித்தால் மிகவும் நன்மையாகும்.

நகங்கள் நம் உடலில் ஒரு பகுதிதான். அவை நம் உடல் நலத்தினைப் பற்றி அநேக செய்திகளைக் கூறுகின்றன. அதனைப் பார்ப்போமோ?

* மஞ்சள் நிற நகங்கள்: பூஞ்சை பாதிப்பாக இருக்கலாம். உடலின் சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும. நுரையீரல், தைராய்டு பிரச்சினை இவற்றினை மருத்துவர் பரிசோதனை செய்வார்.

* வெள்ளை நிற நகங்கள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு. சிறுநீரக பாதிப்பு, ரத்த சோகை போன்றவற்றுக்கான பரிசோதனைகளை மருத்துவர் செய்வார்.

* நீல நிற நகங்கள் இருப்பது ஆக்சிஜன் பற்றாகுறையினைக் காட்டும்.இது இருதய, நுரையீரல் நோய் காரணமாகக் கூட இருக்கலாம்.

* ஸ்பூன் போன்று தோற்ற மளிக்கும் நகங்கள் ரத்த சோகை, இருதய நோய் பாதிப்பு காரணமாகவும் இருக்கலாம்.

* நகங்களின் நுனிகள் கீழ் நோக்கி வளைந்து காணப்பட்டால் மருத்துவர் இருதயம், கல்லீரல், நுரையீரல் இவைகளையும் பரிசோதனை செய்வார்.

* நகங்களின் மீது நேரான, குறுக்கான வரிகள் இருப்பது உடல் சத்து குறைபாட்டினை கூறுபவையாக இருக்கலாம்.

* எளிதில் உடையும் நகங்கள் தைராய்டு, பூஞ்சை அல்லது வேறு உடல் நலக்குறைவால் இருக்கலாம்.

* சிறு சிறு பள்ளங்கள் போல் உள்ள நகங்கள் சரும கோளாறினை குறிப்பிடலாம்.

* நக படுக்கையில் இருந்து நகங்கள் மேலெழும்பி இருப்பது சரும பிரச்சினை- சோரியாசிஸ், பூஞ்சை போன்ற பிரச்சினைகள், தைராய்டு பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். * அடர் நிற கோடுகள் நகத்தின் மீது இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

* நகம் சதை உள் நோக்கி வளருவது, சுகாதார குறைவு, அடிபடுதல், பூஞ்சை மற்றும் சில மருத்துவ காரணங்களால் இவ்வாறு ஏற்படலாம். மருத்துவர் இதனை சிறு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வார். தடித்த நகங்கள் சரும பிரச்சினையாலோ (அல்லது) வேறு சில மருத்துவ காரணங்களாலோ ஏற்படலாம்.

ஆக நகம் என்பது நம் உடல் நலனை காட்டும் கண்ணாடி போல். எனவே எந்த முடிவினையும் எடுக்காமல் மருத்துவர் ஆலோசனையை முறையாய் பெற வேண்டும்.

புழுக்கள்: நூல் புழுக்கள் மிக சாதாரணமாக மக்களிடம் காணப்படும் ஒரு தாக்குதல். இதன் அறிகுறியே உடலின் அடிப்பகுதியில் குறிப்பாக இரவில் அரிப்பு அதிகமாக இருக்கும். மிக எளிதாக ஒரு வேளை (அ) 2 முறை மருந்தில் முழுமையாக குணம் பெறலாம். வீட்டில் ஒருவருக்கு பாதிப்பு என்றால் அனைவரும் இந்த சிகிச்சையினைப் பெற வேண்டும். தொடர்ந்து இந்த பாதிப்பு இருந்தால் மீண்டும் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

இந்த மெல்லிய புழு தாக்குதல் அநேகமாக குழந்தைகளுக்கே ஏற்படுகின்றது.

* கீழ் பகுதியில் அரிப்பு, * குறைந்த பசி * உடல் நலம் இல்லாதது போன்ற உணர்வு * எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். * இதனை தவிர்க்க ஒருவருக்கு பாதிப்பு எனில் மருத்துவர் ஆலோசனையுடன் அனைவரும் சிகிச்சை பெற வேண்டும். * சுகாதாரமின்மையே இதற்கு காரணம் என்பதால் கைகளை சோப்பு கொண்டு கழுவுதல், நகங்களை சீராய் வெட்டுதல் போன்றவற்றினை கடைபிடிக்க வேண்டும். அன்றாடம் குளிப்பதுடன், ஆடைகள், படுக்கை விரிப்புகள் இவற்றினை தோய்த்து சுத்தமாய் இருக்க வேண்டும், பாத்ரூம், டாய்லெட் இவற்றினை சுத்தமாய் வைத்திருக்க வேண்டும்.

இந்த பாதுகாப்புகளை கடைபிடிப்போமே.

குடல் ஆரோக்கியம்: குடல் நமது இரண்டாவது மூளை எனலாம். 400 சதவீதம் அதிக செரடோனின் மூளையினை விட குடலில் அதிகமாக உற்பத்தி ஆகின்றது. கெட்ட குடல் அதிக மனச்சோர்வு, படபடப்பு இவற்றினை ஏற்படுத்துகின்றது. * 80 சதவீத நேரம் எதிர்ப்பு சக்தி குடலில் இருந்தே கிடைக்கின்றது. * அடர்ந்த சாக்லேட் எடுத்துக் கொள்வது நல்லது. இது உயர் ரத்த அழுத்தம், ஸ்ட்ரெஸ், கொழுப்பு, வீக்கம் இவற்றினை குறைக்க உதவும். * குளிர்ந்த அதாவது சாதா நீரில் ஷவர் குளியல் எடுப்பது நல்லது. * எலும்பு சூப் நன்கு உதவும். இனிப்பு செயற்கை இனிப்பு இவற்றினை தவிர்த்து விடுங்கள். மரோபயாடிக்ஸ், தயிர் இவை நல்லது.

குடல் ஆரோக்கியத்தினை காப்போமே!!

பக்கவாதம் என்பது மருத்துவத்தில் மிக அவசர சிகிச்சை தேவைப்படுவது. ரத்த ஓட்டம் மூளைக்கு தடைப்படும் பொழுது அல்லது குறையும் பொழுது மூளை செல்கள் இறக்கின்றன. உடனடியாக கவனிக்கப்படாவிடில் மிக அதிக பாதிப்பான `ஸ்ட்ரோக்' எனப்படும் வாதம் ஏற்படலாம். இதன் முக்கிய அறிகுறிகளை உடனடியாக அடையாளம் கண்டு மருத்துவ உதவியினைப் பெற்றால் பல ஆபத்துகளில் இருந்து ஒருவர் தப்பிக்க முடியும். இதனை உணர்ந்து மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

திடீரென தோள், கால், முகம் வலு விழத்தல் அல்லது மரத்து போகுதல், குறிப்பாக ஒரு பக்கத்தில் ஏற்படுதல். அநேகமாக பலருக்கு இதுவே முதல் அறிகுறியாக இருக்கும்.

பேசுவதில் சிரமம் இருக்கலாம் அல்லது பேச்சினை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கலாம். குழம்பிய நிலை, பார்வை சரியின்றி இருத்தல், இருட்டுவது போல் இருப்பது. மயக்கம், நடை தடுமாற்றம். அதிக தலைவலி. இந்த தலைவலி பொறுக்க முடியாத அளவு இருக்கும். வயிற்று பிரட்டல், வாந்தி இருக்கலாம்.

விழுங்குவதில் சிரமம். கை, கால், முகத்தில் குறுகுறுப்பு. குளறிய பேச்சு. மூச்சு விடுவதில் சிரமம். இவை பொதுவான அறிகுறிகள். நபருக்கு நபர் சற்று வித்தியாசப் படலாம். இவற்றினை அறிந்து கொள்வது உடனடி மருத்துவ சிகிச்சை பெற உதவும்.

உயர் ரத்த அழுத்தம், புகைபிடிப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், அதிக எடை கொண்டவர்கள், அதிக கொலஸ்டிரால் கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ஆரோக்கிய குறைபாடுகள் நல்ல கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

சிலர் அடிக்கடி `பசிக்கின்றது' என்று கூறுவர். ஏதாவது சாப்பிடுவர். ஏன் இப்படி பசிக்கின்றது? சத்தில்லாத உணவு, ஸ்ட்ரெஸ், போதிய அளவு தூக்கமின்மை, ஹார்மோன் மாறுபாடு இவை காரணமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. தேவையான அளவு புரதம், தேவையான அளவு நீர், தேவையான அளவு தூக்கம் இவை அடிக்கடி பசி ஏற்படுவதினை தடுக்கும்.

`பசி' என்றாலே உடலுக்கு உணவு தேவை என்று பொருள் படும். பசித்தால் வயிறு `பெரிதாகும்', தலை வலிக்கும். எரிச்சலாய் இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாது. ஆக அடிக்கடி பசி எடுப்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

உணவில் தேவையான அளவு புரதம் இல்லாமல் இருக்கலாம். தேவையான அளவு புரதம் இல்லாத பொழுது அதிக கலோரி சத்து உள்ள, கார்போஹைடிரேட், சர்க்கரை இப்படி எடுத்துக் கொள்ள தோன்றும், புரதம் தேவையான அளவு இருக்கும் பொழுது பசி ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்துகின்றது.

தேவையான அளவு தூக்கம் இல்லாத பொழுது பசி ஹார்மோன்கள் சற்று தாறுமாறாய் வேலை செய்யும். இதனால் பசி அடிக்கடி தோன்றும்.

மைதா போன்ற உணவுகளில் நார் சத்து நிறைந்து இல்லாததால் தேவையான அளவு கொழுப்பும் உடலுக்குத் தேவை. அது இல்லாவிடில் அடிக்கடி பசி ஏற்படும். பொழுப்பு ஜீரணத்தின் வேகத்தினை சற்று கட்டுப்படுத்தி, வயிறு நிறைவான உணர்வினையும் தரும்.

தேவையான அளவு நீர் குடிக்காவிடில் அடிக்கடி பசி ஏற்படும். சிலர் தண்ணீர் வேண்டும் தாக உணர்வினை பசி உணர்வாக தவறாக எடுத்து கொள்வர். எனவே முறையற்ற நேரத்தில் பசிக்கும் பொழுது சற்று நீர் அருந்தி பார்க்கலாம்.

உணவில் நார் சத்து குறைவாக இருந்தாலும் அடிக்கடி பசி ஏற்படும். மிக அதிக உடற்பயிற்சி செய்யும் பொழுது பசி அடிக்கடி ஏற்படலாம்.

அதிக அளவு ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிறு நிறைவு தரும் ஹார்மோன் உற்பத்தி குறைவதால் அடிக்கடி பசி ஏற்படும். திரவ உணவு வகைகளையே அடிக்கடி எடுத்து கொள்ளும் பொழுது பசி ஏற்படலாம்.

அதிக ஸ்ட்ரெஸ் ஏற்படும்பொழுது பசி உணர்வும் கூடும். சில மருந்துகள். மருத்துவ காரணங்கள்.

பரபரவென வேகமான பழக்கம் கொண்டவர்களுக்கும் அடிக்கடி பசி ஏற்படும்.

Tags:    

Similar News