சொந்தமாக தொழில் செய்ய கற்றுத்தரும் பேஷன் டிசைனிங் படிப்பு
- பேஷன் டிசைன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய படிப்புகளை முறையாக கற்றவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளும் உள்ளன.
- மத்திய அரசால் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி.
பள்ளி கல்லூரிகளில் படித்து முடித்தபின்பு, "சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை" என்ற ஏக்கத்தோடு இன்று பல இளைஞர்கள் தவித்து வருகிறார்கள்.
"படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை" என்ற வருத்தத்தில் பல மாணவர்களும் மாணவிகளும் கலங்கிப் போய் நிற்கிறார்கள்.
இவர்களின் கவலைகளைப் போக்கும் விதத்தில், படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையையும், வேலையில் விருப்பம் இல்லை என்றால், சொந்தமாக தொழில் செய்யவும் கற்றுத்தரும் ஒரு அற்புதமான அனுபவக் கல்விதான் பேஷன் டிசைனிங் (FASHION DESIGNING)என்னும் சிறந்த படிப்பாகும்.
"மிகச் சிறந்த பேஷன் டிசைனராக எதிர்காலத்தில் புகழ்பெற்று விளங்க வேண்டும்" என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேஷன் டிசைனிங் படிப்பில் சேர்ந்து படிக்கிறார்கள்.
முன்பெல்லாம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் நவீன ஆடைகள் தமிழகத்துக்கு வர வேண்டும் என்றால் பல வருடங்கள் ஆகும். ஆனால், இன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும் நவீன ஆடைகள், அடுத்த வினாடியே தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்து கொள்ளும் விதத்தில் செல்போன் வசதியும் இன்டர்நெட் வசதிகளும் ஏராளமாக உள்ளன. எனவேதான், ஆடைகள் அணிவதில் அதிக அக்கறை கொண்டு மாணவ, மாணவிகள் பேஷன் டிசைனிங் படிப்பில் விரும்பிச் சேர்ந்து படிக்கிறார்கள்.
இப்போதெல்லாம் பேஷன் டிசைன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய படிப்புகளுக்கு மிக அதிக வரவேற்பு உள்ளது.
பேஷன் டிசைன்என்பது, ஆடைகளை உருவாக்குவதிலும், நவீன ஸ்டைலோடு இணைந்த ஆடை அணிகலன்களை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், டெக்ஸ்டைல் டிசைன் என்பது தேவையான ஆடைகளை வடிவமைப்பதிலும், கலர்களை இணைத்து துணிகளில் பதிப்பதும், பலவித மெருகூட்டிய வண்ணங்களில் துணிகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.
எனவே, பேஷன் டிசைன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய படிப்புகளை முறையாக கற்றவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளும் உள்ளன.
மிகப் பிரபலமான நிறுவனங்களான ரேமண்ட் ,அரவிந்த் கார்மெண்ட்ஸ்,ஐ.டி.சி லைவ் ஸ்டைல், மதுரா கார்மெண்ட்ஸ், ஓரியண்ட் கிராப்ட் போன்ற பல நிறுவனங்களில் இந்த படிப்பை சிறப்பாக முடித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன.
பேஷன் டிசைன் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகள்.
பேஷன் டிசைன் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகளாக பல படிப்புகள் உள்ளன. குறிப்பாக…
1. பி.எஸ்.சி. பேஷன் டிசைன் (B.Sc.FASHION DESIGN)
2. பி.எஸ்.சி. இன்டீரியர் டிசைன் (B.Sc. INTERIOR DESIGN)
3. பி.எஸ்.சி. காஸ்ட்யூம் டிசைன் அண்ட் பேஷன் (B.Sc. COSTUME DESIGN AND FASHION)
4. டிப்ளமோ இன் பேஷன் டிசைன் (DIPLOMA IN FASHION DESIGN)
5. டிப்ளமோ இன் இன்டீரியர் டிசைன்
(DIPLOMA IN INTERIOR DESIGN)
6. டிப்ளமோ இன் அப்பேரல் அண்ட் பேஷன் டிசைன் (DIPLOMA IN APPAREL AND FASHION DESIGN)
7. பி.ஜி.டிப்ளமோ இன் பேஷன் டிசைன் (P.G DIPLOMA IN FASHION DESIGN)
8. எம்எஸ்சி காஸ்டியூம் டிசைன் அண்ட் பேஷன் (M.Sc. COSTUME DESIGN AND FASHION)
9. சர்டிபிகேட் கோர்ஸ் இன் பேஷன் டிசைன் (CERTIFICATE COURSE IN FASHION DESIGN)
10. பேச்சுலர் ஆப் டிசைன் (பி டி இ எஸ்) (BACHELOR OF DESIGN)
11. பேச்சுலர் ஆப் பேஷன் டெக்னாலஜி (பி எப் டெக்) (BACHELOR OF FASHION TECHNOLOGY)
12. மாஸ்டர் ஆப் டிசைன் (MASTER OF DESIGN)
13. மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மென்ட் (MASTER OF FASHIONMANAGEMENT)
14. மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி (MASTER OF .FASHIONTECHNOLOGY)
போன்ற பல படிப்புகள் பேஷன் டிசைனிங் படிப்புகளாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
பேஷன் டிசைன் படிப்பில் சேர தகுதிகள்:
பொதுவாக பிளஸ் டூ தேர்வில் அறிவியல் வணிகவியல், கலை பிரிவுகளை எடுத்து படித்த மாணவர்கள் பேஷன் டிசைன் பட்டப்படிப்பில்சேர்ந்து படிக்கலாம்.
பேஷன் டிசைன் படிப்பில் பட்ட மேற்படிப்புபடிக்க விரும்புபவர்கள் பேஷன் டிசைன் பட்டப்படிப்பு முடித்திருந்தால் சிறப்பு தகுதியாக கருதப்பட்டு உடனடியாக அந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
பேஷன் டிசைன் படிப்பில் சான்றிதழ் படிப்பு (CERTIFICATE COURSE), டிப்ளமோ படிப்பு (DIPLOMA COURSE)ஆகியவைகளும் நடத்தப்படுவதால் பிளஸ் டூ முடித்தவர்கள் இந்த படிப்பில் நேரடியாகவும் சேர்ந்து படிக்க வாய்ப்பு உள்ளது.
நவீன ஆடைகள் பற்றிய தொழில்நுட்பத்தை முறைப்படி அறிந்து கொள்ளவும் தெளிவான அனுபவ அறிவு பெற்றுக் கொள்ளவும் மத்திய அரசால் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி "ஆகும்.
உலக அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனம், இந்தியாவில் 18 இடங்களில் ஆடை வடிவமைப்பு பற்றிய தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் கல்வி நிறுவனங்களை நடத்துகிறது.
குறிப்பாக, டிசைன், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய முக்கிய பாடங்களில் மாணவ மாணவிகளுக்கு அனுபவக் கல்வியை இது கற்றுத் தருகிறது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி என்னும் இந்த நிறுவனம் பட்டப்படிப்புகளையும் பட்ட மேற்படிப்புகளையும் நடத்துகிறது.
1. பேச்சுலர் ஆப் டிசைன் --அக்சஸரி டிசைன் (BACHELOR OF DESIGN –ACCESSORY DESIGN)
2. பேச்சுலர் ஆப் டிசைன் --பேஷன் கம்யூனிகேஷன் (BACHELOR OF DESIGN –FASION COMMUNICATION)
3. பேச்சுலர் ஆப் டிசைன் --பேஷன் டிசைன் (BACHELOR OF DESIGN—FASION DESIGN)
4. பேச்சுலர் ஆப் டிசைன் -- நிட்வேர் டிசைன் (BACHELOR OF DESIGN –KNITWEAR DESIGN)
5. பேச்சுலர் ஆப் டிசைன் --லெதர் டிசைன் (BACHELOR OF DESIGN –LEATHER DESIGN)
6. பேச்சுலர் டிசைன்-- டெக்ஸ்டைல் டிசைன் (BACHELOR OF DESIGN –TEXTILE DESIGN)
7. பேச்சுலர் ஆப் பேஷன் டெக்னாலஜி (BACHELOR OF FASION TECHNOLOGY –APPAREL PRODUCTION)
8. மாஸ்டர் ஆப் டிசைன் (MASTER OF DESIGN)
9. மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மென்ட் –(M.F.M)-(MASTER OF FASHION MANAGEMENT)
10. மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி—(M.F.TECH)- ( MASTER OF FASHION TECHNOLOGY)
ஆகிய முக்கிய படிப்புகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த படிப்புகளை தவிர இரண்டு செமஸ்டர்கள் நடத்தப்படும் பவுண்டேஷன் புரோக்ராம் என்னும் படிப்பும் நடத்தப்படுகிறது. இங்கு
1 அக்சஸரி டிசைன் (ACCESSORY DESIGN)
2.பேஷன் கம்யூனிகேஷன் FASION COMMUNICATION)
3. பேஷன் டிசைன் (FASION DESIGN)
4. நிட்வேர் டிசைன் KNITWEAR DESIGN)
5. லெதர் டிசைன் (LEATHER DESIGN)
6. டெக்ஸ்டைல் டிசைன் (TEXTILE DESIGN)
ஆகிய பாடப்பிரிவுகளில்அடிப்படை அறிவை வளர்க்கும் பவுண்டேஷன் கோர்சுகளும் நடத்தப்படுகிறது.
இந்த "நிப்ட் "கல்வி நிறுவனத்தில் இறுதி ஆண்டு படிக்கும்போதே மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.அதுமட்டும் அல்லாமல், வேலை தரக்கூடிய நிறுவனங்களில் பயிற்சிகள் பெறவும், புராஜெக்ட் ஒர்க்குகள் (PROJECT WORK) செய்யவும் ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன.
படித்து முடித்தவர்களுக்கும் வேலைகள் வழங்கும் விதத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி பணி வாய்ப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
பெங்களூர், போபால், சென்னை, டாமன், காந்திநகர், ஐதராபாத், கண்ணூர், கல்கத்தா மும்பை, நியூடெல்லி, பாட்னா, ரேவதி, ஷில்லாங், காங்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், ஸ்ரீநகர் போன்ற பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த "நிப்ட் "(NIFT) கல்வி நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு பொதுவாக நவம்பர் மாதம் வெளியிடப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் நுழைவுத் தேர்வு எழுத விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் சேர விரும்பும் அனைவருக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். அதன் பின்னர் ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டப் படிப்பிலும் பட்ட மேற்படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம்.
பட்டப் படிப்பில் சேர தேவையான தகுதிகள்:
பேச்சிலர் ஆப் டிசைன் (BACHELOR OF DESIGN) மற்றும் பேச்சுலர் பேஷன் டெக்னாலஜி (BACHELOR OF TECHNOLOGY)ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் 24 வயதுக்கு உட்பட்டவர்ஆக இருக்க வேண்டும்.
இருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் 5 வருடங்கள் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
பேச்சுலர் ஆப் டிசைன் படிப்புகளில் சேர..
பேஷன் டிசைன் லெதர் டிசைன், ஆக்சஸ்ஸரி டிசைன் டெக்ஸ்டைல் டிசைன் நெட்வொர்க் டிசைன் பேஷன் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகளில் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
பேச்சுலர் ஆப் பேஷன் டெக்னாலஜி படிப்பில் சேர...
பிளஸ் டூ தேர்வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் விருப்ப பாடமாக எடுத்து வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
3 மாஸ்டர் புரோக்ராம்ஸ் படிப்பில் சேர..
(மாஸ்டர் ஆப் டிசைன் மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மென்ட் மற்றும் மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி)
இந்தப் படிப்புகளில் சேர வயதுவரம்பு ஏதுமில்லை.
ஆனால் மாஸ்டர் ஆப் டிசைன் படிப்பில் சேர பட்டப் படிப்பில் வெற்றி இருக்க வேண்டியது அவசியமாகும்.
மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மென்ட் படிப்பில் பட்டப்படிப்பு படித்தவர்களும் சேர்ந்து படிக்கலாம்.
ஆனால், மாஸ்டர் பேஷன் டெக்னாலஜி என்னும் படிப்பில் சேர கண்டிப்பாக பேச்சில்ரா பேஷன் டெக்னாலஜி என்னும் படிப்பை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் முடித்திருக்க வேண்டும். அல்லது பிஇ பிடெக் போன்ற படிப்புகளை படித்து முடித்தவர்களுக்கு மட்டுமே இந்த படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த படிப்புகள் பற்றிய மேலும் விவரங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
NATIONAL INSTITUTE OF FASHION TECNOLOGY, HAUZ KHAS, NEAR
GULMOHAR PARK, NEW DELHI-110016
இணையதள முகவரி; www.nift.ac.in.
தமிழகத்தில் பேஷன் டிசைன் மற்றும் பேஷன் டெக்னாலஜி படிப்பை 30 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.
படிப்புகள் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு நெல்லை கவிநேசன் இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com