செய்திகள்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் டைகர் எக்ஸ்புளோரர் XCx இந்தியாவில் வெளியிடப்பட்டது

Published On 2017-07-26 15:55 IST   |   Update On 2017-07-26 15:55:00 IST
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டைகர் எக்ஸ்புளோரர் XCx மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய டைகர் எக்ஸ்புளோரர் XCx மாடல் பைக்கினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டிரையம்ப் அப்கிரேடுகளில் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன், கார்னரிங் மல்டி-சேனல் ABS ஆப்ஷனை ஆன் மற்றும் ஆஃப் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் டிராக்ஷன் வசதி, ஸ்போர்ட்ஸ், கம்ஃபர்ட் மற்றும் நார்மல் டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வாகனம் ஓட்டுபவருக்கு ஏற்ப புரோகிராம் செய்யக் கூடிய டிரைவ் மோட் ஒன்றும் வழங்கப்படுகிறது. 

புதிய எக்ஸ்புளோரர் XCx 1215 சிசி, டிரிப்பிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இதனால் 137bhp செயல்திறனை அதிகபட்சம் 123Nm டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இத்துடன் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யுனிட் கொண்டிருப்பதால் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மற்றும் மானிட்டர் பயன்படுத்துகிறது. 

டிரையம்ப் எக்ஸ்புளோரர் XCx மின்சார முறையில் மாற்றியமைக்கக் கூடிய விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. டைகர் எக்ஸ்புளோரர் டார்கியூ-அசிஸ்ட் கிளட்ச் லீவர் வழங்கப்பட்டுள்ளதால் எளிதில் பயன்படுத்த முடியும். இதன் குரூஸ் கண்ட்ரோல் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப வேகத்தை கட்டுப்படுத்த முடியும். இத்துடன் 15 வோல்ட் பவர் சாக்கெட், 5 வோல்ட் யுஎஸ்பி சாக்கெட் மற்றும் நேவிகேஷன் யுனிட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய எக்ஸ்புளோரர் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1200 எஸ் மற்றும் பி.எம்.டபுள்யூ ஆர் 1200 ஜி.எஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிரையம்ப் எக்ஸ்புளோரர் XCx விலை ரூ.18.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Similar News