இந்தியா

ஜெரோதா நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த மத்திய அரசு

Published On 2024-08-03 11:16 IST   |   Update On 2024-08-03 11:16:00 IST
  • ஜெரோதா நிறுவனம் 20.12.2021 முதல் 23.03.2023 வரை இந்த சட்டத்தின் கீழ் இந்த விதிமுறையை பின்பற்றவில்லை.
  • 459 நாட்கள் தாமதமாக தலைமை நிதி அதிகாரியாக சிந்தன் பட் என்பவர் நியமிக்கப்பட்டார்.

கார்ப்பரேட் விவகார அமைச்சகம் வழங்கிய குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தலைமை நிதி அதிகாரி நியமனத்தை தாமதப்படுத்தியதற்காக ஜெரோதா அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் நிறுவனர் நிதின் காமத் உட்பட அதன் முக்கிய இயக்குநர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதித்துள்ளது.

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 203 இன் படி, ரூ.10 கோடி அல்லது அதற்கு மேல் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட எந்தவொரு பொது நிறுவனமும் ஒரு தலைமை நிதி அதிகாரி உட்பட பல முக்கிய நிர்வாக பணியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஜெரோதா நிறுவனம் 20.12.2021 முதல் 23.03.2023 வரை இந்த சட்டத்தின் கீழ் இந்த விதிமுறையை பின்பற்றவில்லை. அதன்பிறகு 459 நாட்கள் தாமதமாக தலைமை நிதி அதிகாரியாக சிந்தன் பட் என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஜெரோதா நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் நிறுவனர் நிதின் காமத்திற்கு ரூ.4.08 லட்சமும் அதன் இயக்குநர் ராஜண்ணா புவனேஷ்க்கு ரூ.5 லட்சமும் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் வீரேந்திர ஜெயினுக்கு ரூ.3.45 லட்சமும் அந்நிறுவனத்தின் செயலாளர் ஷிகா சிங்கிற்கு ரூ.3.45 லட்சமும் அதன் இயக்குநர்கள் நித்யா ஈஸ்வரன் மற்றும் துஷார் மகாஜனுக்கு தலா ரூ.1.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News