இந்தியா

VIDEO: தலையில் பெட்ரோல் ஊற்றி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீக்குளிப்பதாக மிரட்டல் - மணிப்பூரில் பரபரப்பு

Published On 2025-06-08 11:56 IST   |   Update On 2025-06-08 12:29:00 IST
  • கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார்.

மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (AT) என்ற மெய்தேய் அமைப்பின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இளைஞர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பு டி-சர்ட் அணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"நாங்கள் ஆயுதங்களை திரும்ப வழங்கினோம், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம், இப்போது நீங்கள் எங்களைக் கைது செய்கிறீர்களா?" என்று அவர்கள் ஆவேசமாகக் குற்றம் சாட்டினர்.

முன்னதாக தலைவர் கைதைக் கண்டித்து, சனிக்கிழமை இரவு டயர்களை எரித்து சாலைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்பாலின் பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மெய்தேய் தன்னார்வக் குழுவான அரம்பாய் தெங்கோலின் (AT) உறுப்பினர்களான இளைஞர்கள் ஆவார்.

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க, மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையைத் தடை செய்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சனிக்கிழமை இரவு 11:45 மணிக்கு அமலுக்கு வந்தது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்தத் தடை அமலில் இருக்கும்.   

Tags:    

Similar News