இந்தியா
குதிரையை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் கைது.. நாக்பூரில் நடந்த வினோதம்!
- கைது செய்யப்பட்டவர் சோட்யா சுந்தர் கோப்ரகடே ஆவார்.
- குதிரை சவாரி அகாடமியில் குதிரையை வன்புணர்வு செய்தார்.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள குதிரை சவாரி அகாடமியில் குதிரையை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சோட்யா சுந்தர் கோப்ரகடே ஆவார்.
இந்த சம்பவம் மே 17 அன்று கிட்டிகாடன் பகுதியில் உள்ள அகாடமியில் நடந்தது. சுந்தர் இரவில் அகடெமிக்குள் அத்துமீறி நுழைவதை செக்யூரிட்டி கவனித்தார்.
பின்னர் சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அந்த இளைஞர் குதிரைகளில் ஒன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அகாடமி மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.