இந்தியா

"நீ பறக்க தகுதியற்றவன், செருப்பு தைக்க போ.." அதிகாரிகளால் சாதிய கொடுமைக்கு ஆளான இண்டிகோ பயிற்சி விமானி

Published On 2025-06-24 03:45 IST   |   Update On 2025-06-24 03:45:00 IST
  • மூன்று மூத்த அதிகாரிகள் சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
  • புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காவல்துறையில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

அரியானாவில் இண்டிகோ விமான நிறுவனத்தில் பயிற்சி விமானியாக பணிபுரிந்த 35 வயது இளைஞர் ஒருவர், தான் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்துள்ளார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை, இண்டிகோவின் மூன்று மூத்த அதிகாரிகள் சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"விமான ஓட்டத் தகுதியற்றவன், போய் செருப்பு தைக்கும் வேலை செய்" என்று அதிகாரிகள் பேசியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தத் துன்புறுத்தலால் தான் வேலையை ராஜினாமா செய்ய நேர்ந்ததாகவும், தனது சம்பளம் குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காவல்துறையில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், இண்டிகோ அதிகாரிகள் தபஸ் தே, மணீஷ் சாஹ்னி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகியோர் மீது பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News