இந்தியா

இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டில் 7.5 சதவீதமாக வளர்ச்சி அடையும்: உலக வங்கி கணிப்பு

Published On 2024-04-03 07:29 GMT   |   Update On 2024-04-03 07:29 GMT
  • தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
  • வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும்.

புதுடெல்லி:

இந்திய பொருளாதாரம் 2023-2024-ம் நிதி ஆண்டில் 7.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அதே நேரம் தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, தெற்காசியா அடுத்த 2 வருடங்களுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக இருக்கும் என்றும், 2025-ல் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் மார்ட்டில் ரைசர் கூறுகையில், வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும். எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிலம், தொழிலாளர், முதலீடு உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என்றார்.

Tags:    

Similar News