இந்தியா

பிரதமர் மோடி, அமித் ஷாவின் பைகளை தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா? - உத்தவ் தாக்கரே

Published On 2024-11-11 18:34 IST   |   Update On 2024-11-11 21:00:00 IST
  • உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • பிரதமர் மோடியின் பைகளை சோதனை செய்வார்களா என்று உத்தவ் தாக்கரே காட்டம்.

மகாராஷ்டிராவின் யவத்மாலில் ஹெலிகாப்டரில் தரை இறங்கிய சிவசேனா (உத்தவ் தாக்ரே) தலைவர் உத்தவ் தாக்கரேவின் பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, அமித் ஷா தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரது பைகளை நீங்கள் சோதனை செய்வீர்களா? என்று காட்டமாக தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே பைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் பரவியது.

இதனையடுத்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "தேர்தல் ஆணையத்தின் மீது கோபமில்லை. அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பைகளை சோதனை செய்வார்களா என்று கேட்கிறேன். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் பைகளை தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?" என்று பேசினார்.

Tags:    

Similar News