இந்தியா

28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக GST வரி குறைக்கப்பட்ட முக்கிய பொருட்கள் என்னென்ன?

Published On 2025-09-04 11:38 IST   |   Update On 2025-09-04 11:38:00 IST
  • 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது
  • 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

18 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

350 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

1,200 சிசிக்குக் குறைவான பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் 1,500 சிசி கொண்ட டீசல் வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சிமெண்டின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார் , ஏசி, டிவி மற்றும் சிமெண்டின் விலை கணிசமாக குறையும்.

Tags:    

Similar News