தமிழ்நாடு செய்திகள்
null

தமிழர்களின் மீது ஆளுநருக்கு அப்படி என்ன வெறுப்பு?.. கனிமொழி சரமாரி கேள்வி

Published On 2025-08-15 18:46 IST   |   Update On 2025-08-15 21:35:00 IST
  • தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.
  • அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அதில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.

இந்நிலையில் இதற்கு திமுக எம்.பி. கனிமொழி இன்று பதிலளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

Tags:    

Similar News