வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து - 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
- ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர் பிரதிமா பகுதியில் உள்ள தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.
இதில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீயை அணைத்த பின் மீட்புக் குழுவினர் உள்ளே இருந்த 7 உடல்கள் மீட்கப்பட்டன. வெடிப்புக்கான காரணாம் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பட்டாசு தயாரிப்பு நடந்து வந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.