இந்தியா
null

போர் என்பது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல.. முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த்!

Published On 2025-05-12 22:55 IST   |   Update On 2025-05-12 22:56:00 IST
  • போர் என்பது காதல் சார்ந்த விஷயம் அல்ல.
  • இது 'போஸ்ட் டிராமாடிக் ஸ்ட்ரெஸ் கோளாறு' (PTSD) என்று அழைக்கப்படுகிறது.

3 நாட்கள் தொடர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடவையிலான சண்டை நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று புனேவில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு அவர் பேசியது வைரலாகி வருகிறது.

மனோஜ் முகுந்த் பேசுகையில், "பயங்கரவாதப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கான விலை மிக அதிகமாக இருக்கும் என்பதைப் பாகிஸ்தானுக்கு நாங்கள் நிரூபித்துள்ளோம் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

போர் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பேசிய அவர், "இரவில் குண்டுகள் விழும்போது, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக குழந்தைகள், தங்குமிடங்களை நோக்கி ஓட வேண்டியிருக்கும் போது, அந்த அனுபவம் அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எந்தக் குழந்தையால்தான் பெற்றோரை இழந்த வலியையும், இதுபோன்ற அழிவையும் மறக்க முடியும் என்று அவர் கூறினார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, அந்த வலி வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

அதை அவர்களால் ஒருபோதும் மறக்க முடியாது . இது 'போஸ்ட் டிராமாடிக் ஸ்ட்ரெஸ் கோளாறு' (PTSD) என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற கொடூரமான காட்சிகளைக் காணும் மக்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தூக்கத்தில் இருந்து பயத்துடன் விழைகின்றனர்.

போர் என்பது காதல் சார்ந்த விஷயம் அல்ல. இது உங்களின் வழக்கமான பாலிவுட் படம் இல்ல. இது ஒரு தீவிரமான விஷயம். போர் அல்லது வன்முறை கடைசி ஆப்ஷனாக இருக்க வேண்டும். பகுத்தறிவற்ற மக்கள் நம் மீது போரை திணித்தாலும், நாம் அதை வரவேற்கக்கூடாது.

ராஜதந்திரம், உரையாடல் மூலம் வேறுபாடுகளைத் தீர்ப்பதும், ஆயுத மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதும் அவசியம். நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, நமக்குள்ளும், நமது குடும்பங்கள், மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை உரையாடல் மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது" என்று அவர் கூறினார். 

Tags:    

Similar News