இந்தியா
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த மசோதா இன்று தாக்கல்
- பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு
- வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு
ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் நேற்று மீண்டும் தொடங்கியது. வரும் 4-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதனையொட்டி பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்று வலுவான எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.