இந்தியா

கலவையான விமர்சனங்களை பெற்ற மணமகளின் அழுகையும், சிரிப்பும்

Published On 2024-11-23 07:49 IST   |   Update On 2024-11-23 07:49:00 IST
  • நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை தற்போது சிலர் சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர்.
  • மணமகளின் இந்த செயல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

திருமணத்தை பொதுவாக ஆயிரங்காலத்து பயிர் என்பர். அதுவும் பெண்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தான் பிறந்து வளர்ந்த ஒரு இடத்தை விட்டு மற்றொரு வீட்டுக்கு பெண்கள் செல்கின்றனர்.

இதனால் தனது குடும்பத்தை விட்டு பிரியும் சோகத்தை எண்ணி திருமணத்தின்போது மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுவர். நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை தற்போது சிலர் சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

அந்தவகையில் திருமணத்தின்போது தனது குடும்பத்தினரை கட்டியணைத்து மணப்பெண் ஒருவர் அழுகிறார். ஆனால் கேமராவை திருப்பிய பின்னர் அந்த பெண் உடனே சிரித்த முகத்துடன் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மணமகளின் இந்த செயல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.




Tags:    

Similar News