இந்தியா

VIDEO: டெல்லி உணவகத்தில் திடீர் தீ விபத்து.. பற்றி எரியும் தீ.. மாடியில் சிக்கிய மக்கள்

Published On 2024-12-09 16:54 IST   |   Update On 2024-12-09 16:54:00 IST
  • பிற்பகல் 2.01 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது
  • ஜங்கிள் ஜம்போரி உணவகத்தில் இந்த தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது.

மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள உணவகத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பிற்பகல் 2.01 மணியளவில் டெல்லி, ரஜோரி கார்டன் ரயில் நிலையம் அருகே உள்ள ஜங்கிள் ஜம்போரி உணவகத்தில் இந்த தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். மளமளவென பரவிய தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தங்கள் கடைக்கும் தீ பரவக் கூடும் என அருகில் இருக்கும் கடைக்காரர்கள் மத்தியிலும் பீதி ஏற்பட்டுள்ளது.

கடையை சுற்றி நின்று தீயை அணைக்கும் வீடியோவை டெல்லி தீயணைப்பு துறை பகிர்ந்துள்ளது. உணவக கட்டிடத்தில் சிக்கியவர்கள் மாடி வழியாக கீழே இறங்க முயற்சிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News