இந்தியா
VIDEO: தொடர் மின்வெட்டால் ஆத்திரம்.. துணை மின் நிலைய அலுவலகத்துக்கு தீவைப்பு - மகாராஷ்டிராவில் பகீர்
- அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தன.
- வால்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், துணை மின் நிலையத்தில் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரெவாசா கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த சிலர் துணை மின் நிலைய அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கும் எந்த பதிலும் இல்லாததால், அலுவலக மேசைக்கு தீ வைத்து, அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் தளபாடங்களை எரித்து சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வல்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவவோம் என போலீஸ் தெரிவித்தனர்.