VIDEO: கனமழையால் வெள்ளக்காடாக மாறிய மும்பை.. மெட்ரோவுக்குள் புகுந்த தண்ணீர் - தத்தளித்கும் மக்கள்
- மும்பை, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
- மும்பையின் ஆச்சார்யா ஆத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது.
தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் ரெயில்களும் பாதிக்கப்பட்டன.
மும்பை, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று (திங்கள்கிழமை) காலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கியதால், மும்பைவாசிகள் சிரமப்பட்டனர். குர்லா, வித்யாவிஹார், சியோன், தாதர், பரேல் பகுதிகள் மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மும்பையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான முதல் கனமழை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தச் சூழலில், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே கனமழை காரணமாக மும்பையின் ஆச்சார்யா ஆத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது. ரெயில்களை விட்டு வெளியே வர அஞ்சிய மக்கள் உள்ளேயே இருந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.