இந்தியா

VIDEO: 'பீர்' குடித்துக்கொண்டே குஜராத் உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் கலந்துகொண்ட வழக்கறிஞர்

Published On 2025-07-03 02:45 IST   |   Update On 2025-07-03 02:45:00 IST
  • அவர் ஒரு குவளை பீர் குடித்துவிட்டு பேசுவது வீடியோவில் காணப்பட்டது
  • இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

குஜராத் உயர்நீதிமன்ற நீதிமன்ற மெய்நிகர் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ஒருவர் பீர் மதுபானம் நட குடித்தது சர்ச்சையாகியது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா, ஜூன் 25 அன்று நீதிபதி சந்தீப் பட் அமர்வு முன் நடந்த மெய்நிகர் விசாரணையில் கலந்து கொண்டார். அப்போது, அவர் ஒரு குவளை பீர் குடித்துவிட்டு பேசுவது வீடியோவில் காணப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இது குறித்து பேசிய குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு, "வழக்கறிஞரின் நடத்தை மிகவும் ஆட்சேபனைக்குரியது. இதுபோன்ற செயல்களைப் கண்டும்காணாமல் விடுவது சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அமர்வு உத்தரவிட்டது.

Tags:    

Similar News