ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி விபத்து.. 18 பேர் உயிரிழப்பு
- இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
- ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஹலொடி பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் பிகனீர் மாவட்டம் கோலயத் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளனர்.
வழிபாட்டை முடித்துவிட்டு இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பலோடா மாவட்டத்தில் உள்ள மடோடாவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 18 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்த அறிந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நொறுங்கிய வேனில் சிக்கிய காயமடைந்தவர்களை கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர். ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிவேகமாகச் சென்ற சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.