இந்தியா

உத்தரகாண்ட் மேக வெடிப்பு: மீட்பு பணிகளை ஆய்வு செய்த முதல் மந்திரி

Published On 2025-08-06 15:55 IST   |   Update On 2025-08-06 15:55:00 IST
  • கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உத்தரகாசியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹர்சில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் மாயமாகினர்.

இந்நிலையில், மேக்வெடிப்பு ஏற்பட்ட தாராலி பகுதியில் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இன்று ஆய்வு மேற்கொண்டு, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மேலும் அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

Tags:    

Similar News