இந்தியா
உத்தரகாண்ட் மேக வெடிப்பு - வீடு இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
- கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், தாராலி கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் உடனடி நிதியுதவி வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.