இந்தியா

நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து

Published On 2024-05-30 11:12 IST   |   Update On 2024-05-30 11:12:00 IST
  • தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
  • தீவிபத்தில் இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 110 இல் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் எந்த தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது என்று தகவல் வெளியாகவில்லை.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தீவிபத்தில் இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏர் கண்டிஷனரில் தீப்பிடித்து பரவியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தீவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News