இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நபர் கைது

Published On 2023-05-25 02:21 IST   |   Update On 2023-05-25 02:22:00 IST
  • விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
  • அமெரிக்க நபரை அதிகாரிகள் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி அன்று அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்திருந்தார்.

அங்கு அந்த நபரிடம் சிஐஎஸ்எப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது பையில் பயன்படக்கூடிய 6 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரை அதிகாரிகள் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்த போலீசார் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News