இந்தியா

பெட்ரோல் பங்க்கில் தகராறு: துப்பாக்கியை காட்டி மிரட்டிய பெண் - வைரல் வீடியோ

Published On 2025-06-17 08:57 IST   |   Update On 2025-06-17 08:58:00 IST
  • இஷான் கானுக்கும் ரஜ்னீஷ் குமார் என்ற பம்ப் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
  • அரிபா கான் ஒரு துப்பாக்கியை எடுத்து ஊழியரின் மார்பில் நேரடியாக குறிவைக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தனது தந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, பெண் ஒருவர் பெட்ரோல் பங்க ஊழியர் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஷாஹாபாத்தில் வசிக்கும் இஷான் கான், தனது மனைவி மற்றும் மகள் அரிபா கானுடன் பெட்ரோல் பங்கிற்கு தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்துள்ளார்.

சிஎன்ஜி நிரப்பும் போது, இஷான் கானுக்கும் ரஜ்னீஷ் குமார் என்ற பம்ப் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஊழியர் இஷானை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இது கேமராவில் பதிவாகியுள்ளது.

தனது தந்தை தள்ளப்படுவதைக் கண்டு கோபமடைந்த அவரது மகள், காரை நோக்கி ஓடிச் சென்று, ஒரு துப்பாக்கியை எடுத்து ஊழியரின் மார்பில் நேரடியாக குறிவைக்கிறார். பின்னர் அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை சமாதானப்படுத்தினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க ஊழியர் ரஜ்னீஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இஷான் கான், அவரது மனைவி ஹுஸ்பானோ மற்றும் மகள் அரிபா கான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News