இந்தியா

உ.பி. வன்முறை

உ.பி. வன்முறை தொடர்பாக 337 பேர் கைது

Published On 2022-06-14 04:55 GMT   |   Update On 2022-06-14 04:55 GMT
  • வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது உ.பி. அரசின் மத துவேச நடவடிக்கை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கான்பூர்:

முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தர பிரதேசம் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்துக்கு கடந்த 10ந்தேதி அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. இதில் பல இடங்களில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இந்த கலவரத்தில் 20 போலீஸ்காரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் கைது நடவடிக்கைகளையும் தொடங்கினர்.

இதில் 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி 337 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் பிரயாக்ராஜ் நகரில் இருந்து 92 பேர், சஹாரன்பூரில் இருந்து 83 பேர், ஹத்ராசில் இருந்து 52 பேர், மொராதாபாத்தில் இருந்து 40 பேர், பெரோசாபாத்தில் இருந்து 18 பேர் மற்றும் அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இருப்பினும் இது உ.பி. அரசின் மத துவேச நடவடிக்கை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News