VIDEO: சமோசாவுக்காக மாப்பிள்ளையை தாக்கிய பெண் வீட்டார்
- இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு சமோசா என்றால் அலாதி பிரியம். எனவே தனது கணவரிடம் சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவர் அதனை வாங்க மறந்து வீட்டுக்குச் சென்று விட்டார். ஆனால் அது இந்த அளவுக்கு போகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.
அதாவது அந்த பெண் உடனடியாக தனது பெற்றோரிடம் வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். அவர்கள் சென்றதும் இரு குடும்பத்தினருக்கும் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் பெண்ணின் குடும்பத்தினர் அவரது கணவர், மாமனாரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இத்துடன் முடியாமல் மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றது. அப்போதும் பெண்ணின் குடும்பத்தினர் கணவன் வீட்டாரை தாக்கினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில் சமோசாவுக்காக ஒரு குடும்பமே சண்டையிடுவதா? என நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை வசைபாடி வருகின்றனர்.