குடியரசு தலைவருடன் அமித் ஷா சந்திப்பு
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விசாவை தடைசெய்தது. சிந்து நிதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அத்துடன் இன்று சிந்து நதி நீரை நிறுத்தியது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.