இந்தியா

மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை: போலீசார் குவிப்பு

Published On 2025-06-30 16:47 IST   |   Update On 2025-06-30 16:54:00 IST
  • கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.
  • 60 வயது பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு.

மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மோங்ஜாங் கிராமத்தில் மர்ம நபர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமம் அருகே காரில் 4 பேர் சென்றுள்ளனர். அப்போது கார் மீது மர்ம நபர்கள் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஒருவர் 60 வயது பெண் ஆவார்.

இச்சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அப்பகுதிக்கு போலீசார், கூடுதல் பாதுகாப்புப்படையினர் விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News