இந்தியா

இந்திய ராணுவம் குறித்து பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்களை கசியவிட்ட இருவர் பஞ்சாபில் கைது

Published On 2025-05-05 12:00 IST   |   Update On 2025-05-05 12:00:00 IST
  • ஹர்ப்ரீத் சிங் என்ற பிட்டு மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.
  • தகவல்களையும் புகைப்படங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் விமானப்படைத் தளங்களின் புகைப்படங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பி வந்த இரண்டு நபர்களை பஞ்சாப் போலீஸ் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அஜ்னாலாவைச் சேர்ந்த ஃபலக்ஷேர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில், இந்த இரண்டு குற்றவாளிகளும் தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் என்ற பிட்டு மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராணுவ நடவடிக்கைகள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களின் தகவல்களையும் புகைப்படங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை போலீசார் மீட்டுள்ளனர், அதன் மூலம் முக்கியமான தரவுகள் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags:    

Similar News