கிரிக்கெட் விளையாடும்போது விபரீதம்.. தண்ணீர் குடித்த உடன் சரிந்து விழுந்து உயிரிழந்த 30 வயது LIC அதிகாரி
- கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
- அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசித்து வந்தவர் 30 வயதான ரவீந்திர அஹிர்வார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி.யில் மேம்பாட்டு அதிகாரியாக ரவீந்திரன் பணியில் சேர்ந்தார்.
கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நேற்று காலை, உள்ளூரில் அரசுக் கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
விளையாடும்போது அசௌகரியத்தை உணர்ந்த ரவீந்திரனின் மைதானத்திலிருந்து தண்ணீர் குடிக்க சென்றார். அவர் தண்ணீரை குடித்த உடனே வாந்தி எடுத்து சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சச்சின் மகோர், பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் உணமையான காரணம் புலனாகும் என்று தெரிவித்தார்.
ரவீந்திரனின் தம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார். விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். 1 மணி நேரதிற்கு பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது" என்று தெரிவித்தார்.