இந்தியா

திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருட சேவை ரத்து

Published On 2023-12-26 12:03 IST   |   Update On 2023-12-26 12:03:00 IST
  • இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
  • அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று தங்க கருட வாகன சேவை நடந்து வருகிறது.

தற்போது ஆதித்தியாயன உற்சவம் நடைபெறுவதால் இன்று நடைபெற இருந்த கருட சேவை ரத்து செய்யப்பட்டது. இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரெயில் நிலையம் அருகே உள்ள மண்டபத்தை எடுத்துவிட்டு புதியதாக ரூ.600 கோடியில் கட்டிடங்கள் கட்டுவது வளர்ச்சி பணிகள் மற்றும் தேவஸ்தானத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News