இந்தியா

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வருகிற 19-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு

Published On 2025-07-16 10:24 IST   |   Update On 2025-07-16 10:24:00 IST
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
  • நேற்று 70,320 பேர் சாமி தரிசனம் செய்தனர். 27,609 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் வருகிற 19-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். தொடர்ந்து 21-ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

கல்யாணோத்ஸவம் ஊஞ்சல் சேவா ஆர்ஜித பிரம்மோத்ஸவம் சஹஸ்ர தீபாலங்கர சேவா டிக்கெட்டுகள் 22-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மெய்நிகர் சேவைகள் மற்றும் அவற்றின் தரிசன இடங்களுக்கான ஒதுக்கீடு பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்.

23-ந்தேதி அங்க பிரதக் ஷணம் காலை 10 மணிக்கும் ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட் காலை 11 மணிக்கும் முதியவர்கள் நாள்பட்ட நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோருக்கான இலவச சிறப்பு நுழைவு தரிசன டோக்கன்கள் பிற்பகல் 3 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

24-ந்தேதி காலை 10 மணிக்கு ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் வாடகைக்கு அறை முன்பதிவு செய்வதற்கான ஒதுக்கீடு வெளியாகிறது.

பக்தர்கள் Mitps://ndevasthanuts ap gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

நேற்று 70,320 பேர் சாமி தரிசனம் செய்தனர். 27,609 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News