பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு
- 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
- இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
புதுடெல்லி:
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதற்கிடையே, 122 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதில் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 135 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 100 முதல் 110 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
NDTV கருத்துக்கணிப்பு முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 152 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 84 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
பியூபிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பின்படி என் டி ஏவுக்கு133 முதல் 148 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 87 முதல் 102 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.