இந்தியா

அர்ஜென்டினாவை ஆதரிப்போருக்கு டீ இலவசம்- கொல்கத்தா கடை உரிமையாளர் அறிவிப்பு

Published On 2022-12-18 15:03 GMT   |   Update On 2022-12-18 15:12 GMT
  • டீ கடை உரிமையாளரின் அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
  • மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் கால்பந்து திருவிழாவை கொண்டாடும் ரசிகர்கள்.

கொல்கத்தா:

கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து ஜூரம் இந்தியாவிலும் தீவிரமாக உள்ளது. கால்பந்து போட்டியை பெரிதும் ரசிக்கும் மேற்கு வங்கம், கோவா மற்றும் கேரளா மாநிலங்களில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீ கடை உரிமையாளர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை ஆதரிப்பவர்களுக்கு இலவசமாக டீ வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த கடையில் உள்ள இலவச டீ குறித்த அறிவிப்பு கார்டுக்கு அருகே பெண் ஒருவர் புன்னகையுடன் நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர்.

Tags:    

Similar News