இந்தியா

தாக்குதலுக்கு இதுவே எங்கள் பதில்: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கபே

Published On 2024-03-10 03:01 GMT   |   Update On 2024-03-10 03:01 GMT
  • தாக்குதலுக்கு ஆளான ராமேஸ்வரம் கபே ஓட்டல் புதிய பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது.
  • பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதுவரை பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மேலும் பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என என்.ஐ.ஏ. தெரிவித்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்காக புதிய பொலிவுடன் ராமேஸ்வரம் கபே ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், இந்தத் தாக்குதல் எங்களையோ, ஓட்டலை வளர்க்கும் சமூகத்தையோ அசைக்கவில்லை. இது உணவகத்தின் தைரியத்தைத் தாக்கும் என தாக்குபவர் நினைத்திருக்கலாம். ஆனால் அவர்களது எண்ணங்கள் தவறானவை. இந்த ஓட்டலை விரைவாக திறந்தது தான் நாங்கள் அவர்களுக்கு அளிக்கும் பரிசு என தெரிவித்தனர்.

Tags:    

Similar News