இந்தியா
புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது.. சட்ட விரோதமானது.. அமலாக்கத்துறைக்கு கெஜ்ரிவால் பதில்
- கெஜ்ரிவால் இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
- 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதற்கிடையே இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. இன்றும் அவர் ஆஜராகவில்லை. 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், "புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்ட விரோதமானது. எனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையாக இருக்கிறது. மறைக்க எதுவும் இல்லை. எந்த ஒரு சம்மனையும் சட்டபூர்வமாக சந்திக்க தயாராக உள்ளேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.