இந்தியா
வைசாக் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து- 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்
- படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 50க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலும், படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணி துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.