தெலுங்கானா இடைத்தேர்தல்: பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது
- ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ், பாரத ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் உடல்நல குறைவு காரணமாக இறந்தார். ஜூப்ளி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி,பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் கே.டி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின் போது வரம்புகளை மீறி ஒவ்வொருவரும் விமர்சனம் செய்து பேசி வருவதால் ஜூப்லி ஹில்ஸ் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.