இந்தியா

கார் விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்

Published On 2025-06-07 14:32 IST   |   Update On 2025-06-07 14:32:00 IST
  • மாதேபுராவில் இருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
  • மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த பணியாளர்களின் நிலை குறித்து விசாரித்தார்.

பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார்.

மாதேபுராவில் இருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது கோரால் அருகே பாட்னா-முசாபர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தேஜஷ்வி யாதவுடன் வந்த வாகனங்கள் தேநீர் குடிப்பதற்காக நள்ளிரவு 12.30 மணியளவில் ஓரிடத்தில் நிறுத்தினர். அப்போது எதிரே வந்த லாரி இரண்டு கார்கள் மீது வேகமாக மோதியது.

தேஜஸ்வி யாதவ் சென்ற காரின் மீது லாரி மோதாததால் அதிர்ஷ்டவசமாக யாதவ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவருடன் வந்த மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த மூன்று பேரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் தேஜஸ்வி யாதவ் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த பணியாளர்களின் நிலை குறித்து விசாரித்தார். 

Tags:    

Similar News